/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியபாளையம் கோவிலில் ரூ.159 கோடியில் அடிப்படை வசதி
/
பெரியபாளையம் கோவிலில் ரூ.159 கோடியில் அடிப்படை வசதி
பெரியபாளையம் கோவிலில் ரூ.159 கோடியில் அடிப்படை வசதி
பெரியபாளையம் கோவிலில் ரூ.159 கோடியில் அடிப்படை வசதி
ADDED : பிப் 17, 2024 11:16 PM
பெரியபாளையம், தமிழகத்தில் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று தங்கி, நேர்த்திக் கடனை செலுத்தி வழிபடுவர். இங்கு நடைபெறும் ஆடி மாத விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இக்கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்காக 159 கோடி ரூபாய் மதிப்பில் மண்டபம் கட்டுதல், பக்தர்கள் தங்கும் விடுதி, திருமண மண்டபத்துடன் கூடிய அன்னதான கூடம், பக்தர்கள் ஓய்வகம், மதில் சுவர், கழிப்பறை மற்றும் குளியலறை ஆகிய கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜெ. கோவிந்தராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.