ADDED : அக் 18, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 'ஏர்டெல்' தனியார் 'மொபைல்' தொலை தொடர்பு டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள, 'டவர்'களை தனியார் கண்காணிப்பு நிறுவனம் பராமரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனியார் மொபைல் டவர்களை கண்காணிக்கும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மணவாளநகர், திருத்தணி பகுதிகளில் இருந்த 'டவர்'களில் உள்ள, 'ரேடியோ ரிமோட் யூனிட்'கள், 13 திருடு போயிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் மணவாளநகர் மற்றும் திருத்தணி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.