தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆதார் சேவை மையங்களில் இலவச விண்ணப்பம் பயனாளிகள் எதிர்பார்ப்பு

 ஆதார் சேவை மையங்களில் இலவச விண்ணப்பம் பயனாளிகள் எதிர்பார்ப்பு

 ஆதார் சேவை மையங்களில் இலவச விண்ணப்பம் பயனாளிகள் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 25, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி தாலுகாவில் இயங்கி வரும் ஆதார் சேவை மையங்களில், இலவசமாக விண்ணப்பங்கள் வழங்க வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தணி தாலுகாவில் நகராட்சி, தாலுகா அலுவலகம், தலைமை அஞ்சலகம், ரயில் நிலையம் எதிரே மற்றும் திருவாலங்காடு அஞ்சலகம் ஆகிய பகுதிகளில் ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த மையங்களில், புதிதாக ஆதார் கார்டு எடுப்பது, பெயர், முகவரி திருத்தம், புகைப்படம் மாற்றுதல் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இங்கு, தினமும் 50 - 75 பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.

ஆனால், ஆதார் கார்டில் திருத்தங்கள் மேற்கொள்ள தேவையான விண்ணப்பங்கள், திருத்தணி தாலுகா அலுவலகம் தவிர மீதமுள்ள சேவை மையங்களில் இலவசமாக வழங்குவதில்லை. மாறாக, சேவை மையங்களில் தனிநபர்கள், ஒரு விண்ணப்பத்திற்கு 10 ரூபாயும், அதை பூர்த்தி செய்து கொடுக்க, 30 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் கிராமங்களில் இருந்து மேற்கண்ட ஆதார் சேவை மையங்களுக்கு வரும் பயனாளிகள், விண்ணப்பங்கள் மற்றும் பூர்த்தி செய்வதற்கு பணம் கொடுத்து செல்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, அனைத்து ஆதார் சேவை மையங்களிலும், பயனாளிகளுக்கு இலவசமாக விண்ணப்பங்கள் வழங்க வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us