/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பீமாரெட்டியூர் தடுப்பணை சேதத்தால் நீரை தேக்கி வைக்க முடியாத அவலம்
/
பீமாரெட்டியூர் தடுப்பணை சேதத்தால் நீரை தேக்கி வைக்க முடியாத அவலம்
பீமாரெட்டியூர் தடுப்பணை சேதத்தால் நீரை தேக்கி வைக்க முடியாத அவலம்
பீமாரெட்டியூர் தடுப்பணை சேதத்தால் நீரை தேக்கி வைக்க முடியாத அவலம்
ADDED : பிப் 04, 2025 01:06 AM

ஆர்.கே.பேட்டைஆர்.கே.பேட்டை ஒன்றியம், பீமாரெட்டியூர், முள்ளிபாளையம், கிருஷ்ணாகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள், ராணிப்பேட்டை மாவட்ட மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.
மலைப்பகுதியில் இருந்து பாயும் ஓடை, இந்த கிராமங்களை வளப்படுத்துகின்றன.
சிறப்பான நீர்வளத்தால், இந்த பகுதியில் காய்கறி மற்றும் மலர் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு விளையும் காய்கறி தினசரி பறிக்கப்பட்டு, சென்னை கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. பூக்கள், வேலுார் மற்றும் திருத்தணி தினசரி சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகளின் நீராதாரமாக இங்குள்ள ஓடை அமைந்துள்ளது.
ஓடையின் நீர்வளத்தால், காய்கறி மற்றும் மலர் சாகுபடி செழிப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மயிலாடும்பாறை செல்லும் வழியில் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை இடிந்து சேதம் அடைந்துள்ளது. இதனால், தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை சீரமைத்து, நீரை தேக்கி வைத்தால், இந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.