/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா
/
அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா
ADDED : ஜன 24, 2024 12:46 AM

கனகம்மாசத்திரம்:கனகம்மாசத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 106 மாணவர்கள் மற்றும் ஆற்கடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 103, அருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 66 என மூன்றுபள்ளியில் சேர்த்து மொத்தம் 275 மாணவ -- மாணவியர்கள பிளஸ் 1 பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிவளாகத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திருவள்ளூர் தொகுதி தி.மு.க.- எம்.எல்.ஏ. ராஜேந்திரன் மாணவர்களுக்கு விலையில்லாசைக்கிளை வழங்கினார். இதில் திருத்தணி கல்வி மாவட்ட அதிகாரிகள், பள்ளிதலைமையாசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், 66 மாணவ - மாணவியர் பிளஸ் 1 படித்து வருகின்றனர். இவர்களுக்கு நேற்று இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ரவிவர்மா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம் பங்கேற்று, சைக்கிள்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

