/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பிடே ரேட்டிங்' சதுரங்கம் இளம்பர்தி 'சாம்பியன்'
/
'பிடே ரேட்டிங்' சதுரங்கம் இளம்பர்தி 'சாம்பியன்'
ADDED : நவ 19, 2024 06:46 AM

சென்னை; குருநானக் கல்லுாரியில் நடந்த சர்வதேச அளவிலான, 'பிடே ரேட்டிங்' சதுரங்க போட்டியில், தமிழக வீரர் இளம்பர்தி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
குருநானக் கல்லுாரி மற்றும் மவுண்ட் செஸ் அகாடமி இணைந்து, 'சிங் காம்பிட்' எனும் பெயரில், சர்வதேச, 'பிடே ரேட்டிங்' செஸ் போட்டியை, வேளச்சேரியில் உள்ள கல்லுாரி வளாகத்தில், நான்கு நாட்களாக நடத்தியது.
இப்போட்டியில், 300க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் திறமையை வெளிப்படுத்தினர்.
நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், தமிழக வீரரான சர்வதேச வீரர் இளம்பர்தி மற்றும் மற்றொரு தமிழக வீரர் பாலசுப்ரமணியன் எதிர்கொண்டனர்.
அதில், இளம்பர்தி வெற்றி பெற்று ஒட்டுமொத்தமாக, 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
அவரை தொடர்ந்து, 7 புள்ளி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த தமிழக வீரர் பாலசுப்ரமணியனுக்கு 75,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
மூன்றாம் இடத்தை, ஐ.சி.எப்., வீரர் பிரவின் குமார், நான்காம் இடத்தை ஐ.சி.எப்., வீரர் லட்சுமணன், ஐந்தாம் இடத்தை தமிழக வீரர் விக்னேஷ் உள்ளிட்டோர் கைப்பற்றினர்.
போட்டியில், முதல் 20 இடங்களை பிடித்த வீரர் - வீராங்கனையருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.