நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம், பெரியபாளையம் அருகே, வேளகாபுரம் ஊராட்சி, பள்ளக்காலனியில் வசித்து வருபவர் ஜவஹர், 29. நேற்று முன்தினம் காலை, தன் பைக்கில், பெரியபாளையம் கோவில் அருகே, ஆவின் பால் பூத் அருகே நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சுற்றியுள்ள பகுதிகளில் பைக்கை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜவஹர், பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.