ADDED : ஏப் 15, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை: பைக்கில் சென்றவர் நிலை தடுமாறி சாலையோரம் விழுந்ததில் படுகாயமடைந்தவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த பைவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த், 40. தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 10ம் தேதி, பணி முடிந்து சோளிங்கரில் இருந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
சானுார் மல்லாவரம் கூட்டுச்சாலை அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பைக் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த விஜயகாந்த், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
