/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதம்
/
பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதம்
ADDED : டிச 09, 2025 04:43 AM
திருத்தணி: விரைவு ரயிலின் ஓட்டுநருக்கு திடீரென உடல்நலம் நெஞ்சு வலி ஏற்பட்டதால், திருத்தணி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. 2 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
திருநெல்வேலியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு செல்லும் பிலாஸ்பூர் விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இரவு 8: 20 மணிக்கு திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது திடீரென ரயில் ஓட்டுநர் ராவவெங்கட சிவபிரசாத், 47 என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே ஊழியர்கள் அவரை திருத்தணி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் ரயில்வே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு மணி நேரம் தாமதமாக இரவு 10:20 மணிக்கு மாற்று ரயில் ஓட்டுநர் மூலம் ரயில் ஆந்திராவை நோக்கி புறப்பட்டு சென்றது.

