ADDED : ஆக 23, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு, ஆக. 24–
திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளாக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 70. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, 60, என்பவருக்கும் இடையே, நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம், சுப்பிரமணி சர்ச்சைக்குரிய நிலத்தில் ஏர் உழுது கொண்டிருந்த போது, பெருமாள், அவரது மகன்கள் வீரமணி, 65, பிரகாஷ், 40, ஆகியோர், சுப்பிரமணியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
தகவல் அறிந்ததும், சுப்பிரமணியின் மனைவி விஜயா, 55, என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதம் செய்ததால், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கையால் தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து, இரு தரப்பினர் கொடுத்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார், 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
