/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சதுப்பு நிலமான தரிசு நிலங்கள் இரை தேடி குவியும் பறவைகள்
/
சதுப்பு நிலமான தரிசு நிலங்கள் இரை தேடி குவியும் பறவைகள்
சதுப்பு நிலமான தரிசு நிலங்கள் இரை தேடி குவியும் பறவைகள்
சதுப்பு நிலமான தரிசு நிலங்கள் இரை தேடி குவியும் பறவைகள்
ADDED : நவ 28, 2024 12:41 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில், பெய்து வரும் மழையால், பழவேற்காடு ஏரியில் உள்ள சதுப்பு நிலங்கள் முழுதும் கடல் போல் காட்சியளிக்கின்றன. இதனால், அங்கு பறவைகள் இரை தேட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமபுற தரிசு நிலங்கள், தொடர் மழையால் சதுப்பு நிலங்கள் போல மாறியுள்ளன. இதனால், ஆள் நடமாட்டம் இல்லாத தரிசு நிலங்களை நோக்கி பறவைகள் படையெடுத்து வருகின்றன.
அங்கு, சகதியில் உள்ள நத்தை, புழுக்களை இரையாக உட்கொண்டு, அங்குள்ள மரங்களில் இளைப்பாறும் பறவைகளை அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக, சாம்பல் நிறத்தில் உள்ள நத்தை குத்தி நாரை பறவைகள் கூட்டமாக இரை தேடி வருகின்றன.