ADDED : ஏப் 26, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:ஜம்மு - காஷ்மீரின், பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணியர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, பா.ஜ., சார்பில் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலர் சந்திரசேகரன் தலைமையில் நடந்த ஊர்வலத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊர்வலத்தை தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

