/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்பு மல்லியங்குப்பத்தில் கருப்பு கொடி எதிர்ப்பு
/
பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்பு மல்லியங்குப்பத்தில் கருப்பு கொடி எதிர்ப்பு
பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்பு மல்லியங்குப்பத்தில் கருப்பு கொடி எதிர்ப்பு
பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்பு மல்லியங்குப்பத்தில் கருப்பு கொடி எதிர்ப்பு
ADDED : ஜன 15, 2025 11:49 PM

ஆரணி,ஆரணி பேரூராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, மல்லியங்குப்பம் கிராமத்தில் வீடுகள் முன் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆரணி பேரூராட்சியுடன் அருகில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியை இணைப்பது மீதான அரசாணையை அரசு வெளியிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த கிராமத்தினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின், பொங்கல் தொகுப்பை புறக்கணித்து, ரேஷன் கடையில் டோக்கன்களை பெற மறுத்துவிட்டனர். இதையடுத்து, இம்மாதம், 13ம் தேதி, கிராம முக்கியஸ்தர்களை அழைத்து, பொன்னேரி தாசில்தார் அலுவலகத்தில், சப்- - கலெக்டர் வாகேசங்கேத் பல்வந்த் பேச்சு நடத்தினார்.
பேரூராட்சியுடன் இணைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கிராம மக்கள் விளக்கினர். கிராம மக்களின் கோரிக்கை மீது, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, சப் - -கலெக்டர் உறுதி அளித்தார்.
அன்று மாலை, மல்லியங்குப்பம் ரேஷன் கடையில், பொங்கல் தொகுப்பை வழங்க சப்- - கலெக்டர் சென்றிருந்தார்.
கிராமத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே பொங்கல் தொகுப்பை பெற்ற நிலையில், மற்ற அனைவரும் பெற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆரணி பேரூராட்சியுடன் மல்லியங்குப்பம் கிராமத்தை இணைக்கும் அறிவிப்பை திரும்ப பெறும் வரை எங்களின் எதிர்ப்பு தொடரும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில் கிராம மக்கள் பொங்கல் கலை நிகழ்ச்சி மற்றும் மாடு விரட்டும் நிகழ்வை புறக்கணிப்பு செய்து வீடுகள் முன், கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

