/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் கசிவால் ரத்த பரிசோதனை கூடம் தீக்கிரை
/
மின் கசிவால் ரத்த பரிசோதனை கூடம் தீக்கிரை
ADDED : பிப் 10, 2026 06:19 AM
கும்மிடிப்பூண்டி: ரத்த பரிசோதனை ஆய்வு கூடத்தில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு உபகரணங்கள் தீக்கிரையாகின.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே, ஏடூர் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 37. கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவில், ரத்த பரிசோதனை ஆய்வு கூடம் நடத்தி வருகிறார்.
நேற்று மாலை, பூட்டியிருந்த ஆய்வுக்கூடம் தீப்பிடித்து எரிந்தது. கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆய்வு கூடத்தில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் தீக்கிரையாகின.
இதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

