ADDED : நவ 27, 2024 01:00 AM

அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, நேற்று பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் பிரகாஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியின் பா.ம.க., செயலர் சங்கர் உட்பட, 70 பேர் பங்கேற்றனர்.
பா.ம.க., கட்சி நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசிய தமிழக முதல்வரை கண்டித்தும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். தொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். அதன்பின், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
