தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பழவேற்காடில் இடி விழுந்து படகு தீப்பிடித்து எரிந்து நாசம்

பழவேற்காடில் இடி விழுந்து படகு தீப்பிடித்து எரிந்து நாசம்

பழவேற்காடில் இடி விழுந்து படகு தீப்பிடித்து எரிந்து நாசம்


ADDED : ஆக 19, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழவேற்காடு: பழவேற்காடில் இடி விழுந்ததில் படகு தீப்பிடித்து எரிந்து சேதமானது.

பழவேற்காடு, அரங்கம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி, 40. இவரது பைபர் படகு கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை, பழவேற்காடு மீனவ பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

அப்போது, பசுபதியின் படகின் மீது இடி விழுந்து தீப்பிடித்தது. உடனே, பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். மீனவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர், படகை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இந்த விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பலான படகின் இன்ஜின் உட்பட பல்வேறு பகுதிகள் முழுமையாக எரிந்து சேதமாகின. திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us