/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துார்வாரி அகலப்படுத்தியதால் நிரம்பி வழியும் போடிராஜி குளம்
/
துார்வாரி அகலப்படுத்தியதால் நிரம்பி வழியும் போடிராஜி குளம்
துார்வாரி அகலப்படுத்தியதால் நிரம்பி வழியும் போடிராஜி குளம்
துார்வாரி அகலப்படுத்தியதால் நிரம்பி வழியும் போடிராஜி குளம்
ADDED : ஜன 08, 2024 06:24 AM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், நாராயணபுரம் கால்நடை மருந்தகம் அருகே, போடிராஜி கிராம பொதுகுளம் அமைந்துள்ளது.
புதர் மண்டி சீரழிந்து கிடந்த இந்த குளம் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. கரைகள் பலப்படுத்தப்பட்டன. நீர்ரவத்து கால்வாய்களும் இயந்திரம் வாயிலாக அகலப்படுத்தப்பட்டன. இதனால், கிராமத்தை ஒட்டிய மலையில் இருந்து மழைநீர் தடையின்றி பாய்ந்து வருகிறது.
இதனால் குளத்திற்கு தொடர்ந்து நீர்வரத்து நீடித்து வருகிறது. தொடர் நீர்வரத்தால் குளம் முழுதுமாக நிரம்பி வழிகிறது. ஓராண்டுக்கு முன் புதர் மண்டிக்கிடந்த குளம் தற்போது நிரம்பி நிற்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீர்நிலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.