/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்றில் இறங்கியவர் சடலமாக மீட்பு
/
ஆற்றில் இறங்கியவர் சடலமாக மீட்பு
ADDED : அக் 14, 2025 10:53 PM
பள்ளிப்பட்டு:லவா ஆற்றை கடந்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.
பள்ளிப்பட்டு அடுத்த வெளிகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 56. இவர், குமாரராஜிபேட்டையில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு திரும்பினார்.
ஆனால், இரவு நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். கடையில் இருந்து வீடு திரும்பும் வழியில் கோவிந்தன், லவா ஆற்றில் இறங்கியதாக அந்த பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளிப்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று லவா ஆற்றில், கோவிந்தனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், கோவிந்தன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
லவா ஆற்றில் கடந்த இரண்டு வாரங்களாக வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது. ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.