/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு
/
கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு
ADDED : ஜன 20, 2025 02:00 AM

பழவேற்காடு:சென்னை, செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரிபட்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் திலக் பிரசன்னா, 16; தனியார் பள்ளி மாணவன்.
கடந்த, 17 ம் தேதி பெற்றோருடன், பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு வந்த திலக் பிரசன்னா, கடலில் இறங்கி குளிக்கும்போது அலையில் சிக்கி, மாயமானார்.
திருப்பாலைவனம் போலீசார், மீனவர்கள் உதவியுடன் கடந்த, மூன்ற நாட்களாக திலக் பிரசன்னாவை தேடி வந்தனர்.
படகுளில் கடற்கரையோர பகுதிகளில் தேடிவந்த நிலையில், நேற்று காலை, பழவேற்காடு கோரைகுப்பம் மீனவ கிராமம் அருகே, திலக் பிரசன்னாவின் சடலம் கரை ஒதுங்கி கிடப்பது தெரிந்தது.
போலீசார், திலக் பிரசன்னாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.