தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கொதிகலன் வெடித்து தொழிலாளி பலி

கொதிகலன் வெடித்து தொழிலாளி பலி

கொதிகலன் வெடித்து தொழிலாளி பலி


ADDED : நவ 12, 2024 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2024 07:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தில் சூரியதேவ் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்தது. கொதிகலன் அருகே வேலை பார்த்துக் கொண்டிருந்த, உத்திரபிரேதசம் மாநிலத்தை சேர்ந்த தீபக்குமார்சிங், 42, பீஹார் மாநிலத்தை சேர்ந்த சிவம்குமார், 24, ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, தீபக்குமார்சிங் உயிரிழந்தார். சிவம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us