/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 24ல் புத்தக கண்காட்சி
/
திருவள்ளூரில் 24ல் புத்தக கண்காட்சி
ADDED : பிப் 22, 2024 01:07 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 24ல் புத்தக கண்காட்சி துவங்குகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் உடன் இணைந்து புத்தக திருவிழா வரும் 24 முதல் மார்ச் 4 வரை 10 நாட்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. தினமும் காலை 10:00- இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
இக்கண்காட்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
கண்காட்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படத்தக்க வகையில் புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் அமைய உள்ளது. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
மேலும், தினமும் சிந்தனையை துாண்டும் வகையில் பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர். புத்தக வாசிப்பின் பயன்கள் குறித்து பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.