/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி - நம்பாக்கம் சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
/
பூண்டி - நம்பாக்கம் சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
பூண்டி - நம்பாக்கம் சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
பூண்டி - நம்பாக்கம் சாலையோரம் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 27, 2024 01:09 AM

திருவள்ளூர்:பூண்டியில் இருந்து நம்பாக்கம் சாலை சேதமடைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
திருவள்ளூர் ஒன்றியம் பூண்டியில் இருந்து நம்பாக்கம் வழியாக சென்றாயன்பாளையம் உள்பட, 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இவர்கள் அத்தியாவசிய தேவைக்காக, பூண்டி வழியாக திருவள்ளூர் வந்து செல்கின்றனர். இக்கிராமத்திற்கு செல்லும் தார்சாலை ஆங்காங்கே சேதமடைந்து, குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இவ்வழியாக செல்லும் பேருந்துகள், கார், இருசக்கர வாகனங்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டியிருந்தது. அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வானகனங்கள் கூட இச்சாலையில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு குண்டும், குழியுமாக இருந்த இச்சாலை சீரமைக்கப்பட்டு, புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இதனால், கிராமவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும், சாலையின் இருபுறமும், பள்ளமாக இருப்பதால், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாற்றத்துடன் செல்கின்றன.
இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாததால், அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பூண்டி-நம்பாக்கம் சாலையின் இருபுறமும் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.