தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை


UPDATED : நவ 23, 2026 07:16 PM

ADDED : நவ 23, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:16 PM ADDED : நவ 23, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை: சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, கொரக்கந்தண்டலம் கிராம மக்கள் பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பூண்டி ஒன்றியம், கொரக்கந்தண்டலம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம்.

இப்பகுதி மக்கள், தங்களின் அத்தியாவசித் தேவைக்கு, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் சென்று வருகின்றனர்.

மாணவ – மாணவியர், உயர்கல்விக்கு திருவள்ளூர் செல்ல வேண்டும். இப்பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.

சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று திரும்புவோர், சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து காயம் அடைகின்றனர். அவசர மருத்துவ உதவிக்கு, 108 ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை உள்ளது.

இப்பகுதியில் சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கலெக்டர், எம்.பி., – எம்.எல்.ஏ., பூண்டி ஒன்றிய நிர்வாகம் ஆகியோரிடம் மனு கொடுத்தும், எவ்வித பலனும் இல்லை.

அதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் சமரச பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கையை நிறைவேற்றினால் தான் நாங்கள் செல்வோம் என, அலுவலகம் முன் அமர்ந்து கிராம மக்கள் கோஷமிட்டனர்.

ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பதாக, அதிகாரிகளிடம் கிராம மக்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, பி.டி.ஓ., வரப்பிரசாத், கலெக்டர் கவிதாவிற்கு தகவல் அளித்தார். கலெக்டர் கவிதா அளித்த உத்தரவின்படி, ஒரு மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதன் பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஒரு மாதத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என, கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us