/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பஸ் ஓட்டுநரை தாக்கிய சிறுவன் கைது
/
அரசு பஸ் ஓட்டுநரை தாக்கிய சிறுவன் கைது
ADDED : நவ 11, 2025 10:16 PM
வெள்ளவேடு: திருவள்ளூரில் இருந்து, நேற்று காலை 8:45 மணியளவில், தடம் எண் - 597ஏ என்ற மாநகர அரசு பேருந்து, பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டையைச் சேர்ந்த குணசேகர், 45, என்பவர் ஓட்டுநராகவும், திருத்தணி சலீம்பாஷா, 58, என்பவர் நடத்துனராகவும் பணியில் இருந்தனர்.
திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கூடப்பாக்கம் நிறுத்தத்தில் பயணியரை ஏற்றிக் கொண்டு பேருந்து புறப்பட தயாரானது. அப்போது, பேருந்தின் கதவு பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுவனை உள்ளே வரும்படி ஓட்டுநர் தெரிவித்தார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஓட்டுநரை ஆபாசமாக பேசிய சிறுவன், திடீரென சரமாரியாக தாக்கினார். இதில், ஓட்டுனர் குணசேகருக்கு, மூக்கில் அடிபட்டு ரத்தம் வந்தது.
குணசேகரை மீட்ட பயணியர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகலவறிந்த வெள்ளவேடு போலீசார், கூடப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

