ADDED : டிச 31, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி, கவரப்பேட்டை, கொள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி மகன் முகிலன், 14. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளி விடுமுறையால் பொன்னேரி அடுத்த, பிரளயம்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, பாட்டியுடன் வந்திருந்தான். நேற்று, பகல் 1:00 மணிக்கு, அங்குள்ள கோவில் குளத்தில், குளிக்க சென்றான்.
குளிப்பதற்காக குளத்தில் குதித்த சிறுவன், நீண்ட நேரமாகியும் வெளியே வராத நிலையில் கிராமவாசிகள், குளத்தில் குதித்து, தண்ணீரில் மூழ்கி கிடந்த சிறுவனை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியில் இறந்தான்.