/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டட பணிக்கு தோண்டிய குழியில் விழுந்த சிறுவன் பலி
/
கட்டட பணிக்கு தோண்டிய குழியில் விழுந்த சிறுவன் பலி
கட்டட பணிக்கு தோண்டிய குழியில் விழுந்த சிறுவன் பலி
கட்டட பணிக்கு தோண்டிய குழியில் விழுந்த சிறுவன் பலி
ADDED : நவ 24, 2024 05:52 AM
சென்னை: கட்டட பணிக்கு தோண்டிய குழியில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி பலியானான்.
திருவல்லிக்கேணி, தெற்கு குளக்கரைதெருவைச் சேர்ந்தவர் வனமாதி, 8. நேற்றுவிடுமுறை தினம்என்பதால், தேரடிதெருவில் உள்ள தாத்தா நரசிம்மன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பார்த்தசாரதிகோவிலுக்கு சொந்தமான இடத்தில், பணியாளர்கள் தங்கும்வீடு கட்டுமான பணி நடைபெறுகிறது.
கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டிருந்த 7 அடி குழியில், 6 அடி தண்ணீர் தேங்கிஉள்ளது.
அதன் அருகே, நேற்று மாலை வனமாதி, இறகு பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போதுஅங்கிருந்த குழியில் தவறி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

