ADDED : செப் 24, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வெள்ளேரிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், 35. இவர், பாப்பரம்பாக்கம் பிரதான சாலையோரம் முட்டை கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம், இவரது மனைவி தனது மகன், புவன் அஸ்வந்த், 3 உடன், தன் கணவருக்கு சாப்பாடு கொண்டு வந்தார்.
பின், வீட்டிற்கு செல்வதற்காக, மகனுடன் பாப்பரம்பாக்கம் சாலையோரம் நின்றிருந்தனர்.
அப்போது, வேகமாக வந்த மகேந்திரா வேன், சிறுவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியில் உயிரிழந்தார்.

