ADDED : செப் 04, 2026 09:01 PM
அ நிறம் | அளவு
வேப்பம்பட்டு, செப். 5–
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 40, இவருக்கு சரஸ்வதி, 37, என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் நிரஞ்சன், 7. அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மதியம் 3:00 மணியளவில், வீட்டின் படுக்கையறையில் உள்ள ஜன்னல் கம்பியில் துண்டை மாட்டி, நிரஞ்சன் ஊஞ்சலாடினான். அப்போது, எதிர்பாராதவிதமாக துண்டு கழுத்தில் சுற்றி இறுக்கியது.
சிறுவனின் அலறலைக் கேட்ட பெற்றோர், அவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, சிறுவன் உயிரிழந்தான்.
