ADDED : ஆக 04, 2025 11:05 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியில், வேதேஷ் என்ற 7 வயது சிறுவன், சமகோணாசனம் எனும் யோகாசனத்தில், ஒரு நிமிடத்தில் 38 முறை சுழன்று, சாதனை படைத்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே குமாரநாயக்கன்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுதாகர், லோகேஸ்வரி தம்பதியரின் மகன் வேதேஷ், 7. அங்குள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும், ஸ்ரீ சங்கரி யோகா மையத்தில், வேதேஷ் யோகாசன பயிற்சி பெற்று வருகிறார்.
இவர், தரையில், இடது வலதாக இரு கால்களையும் நேர் கோட்டில் விரிக்கக்கூடிய, சமகோணாசனம் எனும் யோகாசனத்தில் அமர்ந்தபடி, ஒரு நிமிடத்தில், 38 முறை கால்களை சுழற்றி சாதனை படைத்தார்.
இவரது சாதனை, 'இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன.