/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாகசாலை முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா 15ல் துவக்கம்
/
பாகசாலை முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா 15ல் துவக்கம்
பாகசாலை முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா 15ல் துவக்கம்
பாகசாலை முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா 15ல் துவக்கம்
ADDED : பிப் 13, 2024 06:16 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை கிராமத்தில் கொசஸ்தலையாற்றின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா, 10 நாட்கள் விமரிசையாக நடைப்பெறும். அப்போது திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்வர்.
இவ்விழா வரும் 15ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
தொடர்ந்து காலை, மாலை என இருவேளையும் உற்சவர் பாலசுப்பிரமணிய சுவாமி குதிரை, மயில் ஆடு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அருள்பாலிப்பார். 24 வரை நடைப்பெறும் 10 நாள் விழாவில், ஒன்பதாம் நாளில் கொடுவினை தீர்க்கும் வினையறுக்கும் வேல்பூஜை நடைப்பெறும்.