/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
/
கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : ஏப் 13, 2025 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி:பொன்னேரி, திருவாயற்பாடியில் அமைந்துள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 24ம் தேதி வரை, தொடர்ந்து 12 நாட்கள் உற்சவங்கள் நடைபெறுகின்றன.
இதில், 17ம் தேதி அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு திருவிழாவும், 19ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. நேற்று காலை செல்வர் திருக்கூத்தும், மாலை அங்குரார்ப்பணம் உற்சவமும் நடைபெற்றது. பின், உற்சவர் பெருமான் வீதியுலாவும் நடந்தது. இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது.