/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு
ADDED : பிப் 29, 2024 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்த மாதவன், 30, காக்களூர் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 26ம் தேதி மாலை குடும்பத்துடன் பட்டாபிராமில் உள்ள தன் சகோதரி வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், உள்ளே சென்று பார்த்த போது, 8 சவரன் தங்கம், 100 கிராம் வெள்ளி, 'டிவி' உள்ளிட்டவை திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து, நேற்று முன்தினம் மாதவன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

