/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்கல் சூளை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
செங்கல் சூளை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
செங்கல் சூளை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
செங்கல் சூளை தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : பிப் 21, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை: செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி, மயங்கி விழுந்து பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் காலனி யைச் சேர்ந்தவர் யோவான், 45. இவர், நேற்று காலை காண்டாபுரம் அருகே, கிருஷ்ணன் என்பவரின் செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே, சக தொழிலாளர்கள் யோவானை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே யோவான் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.