/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பு இல்லாத பாலம்: அத்திப்பட்டில் ஆபத்து
/
தடுப்பு இல்லாத பாலம்: அத்திப்பட்டில் ஆபத்து
ADDED : ஜன 31, 2025 02:51 AM

மீஞ்சூர்,மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் இருந்து, புழுதிவாக்கம் செல்லும் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயின் குறுக்கே உள்ள பாலம், பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
இப்பகுதியில், சாலை அகலமாகவும், பாலம் குறுகலாகவும் இருப்பதால், வேகமாக பயணிக்கும் போது, வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
பாதுகாப்பு இல்லாத இந்த பாலத்தின் வழியாக, இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள், விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகம், கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், நிறுவனங்களுக்கு சென்று வரும் கனரக வாகனங்கள், இந்த பாலத்தின் வழியாகவே பயணிக்கின்றன.
அவை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், அசம்பாவிதங்கள் நேரிடும் முன், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.