/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் 'அவுட்' வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பு
/
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் 'அவுட்' வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பு
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் 'அவுட்' வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பு
பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் 'அவுட்' வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பு
ADDED : ஏப் 17, 2025 09:23 PM
காக்களூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில், ஆஞ்சநேயர்புரம், பூங்கா நகர், அப்பாசாமி சாலை, மாருதி நகர் நியூ டவுன், பாக்கியம் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சியில், 12,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மேலும், காக்களூர் தொழிற்பேட்டையில், 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிவாசிகளில் பெரும்பாலானோர், பி.எஸ்.என்.எல்., வீட்டு இணைப்பு மற்றும் மொபைல்போன் சேவை இணைப்பை பெற்றுள்ளனர்.
ஆனால், காக்களூர், புட்லுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சேவை விரைவாக இருப்பதில்லை. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக, காக்களூர் ஊராட்சி முழுதும் பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவையில் பெரும் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, காக்களூர் பாக்கியம் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி ராகவேந்திரா பட் கூறியதாவது:
காக்களூர் ஊராட்சியில் பெரும்பாலானோர், பி.எஸ்.என்.எல்., மொபைல் இணைப்பு பெற்றுள்ளனர். இங்கு, இரண்டு மொபைல் டவர் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த இரண்டு டவர்களும் 'சார்ஜ்' இல்லாததால், அனைத்து மொபைல் இணைப்புகளுக்கும், இணையதள சேவை கிடைப்பதில் பெரும் தடங்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து, திருவள்ளூர் தொலைபேசி அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை என விளம்பரப்படுத்தும், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், தங்களது குறைகளை சரிசெய்து, வாடிக்கையாளர்களுக்கு விரைவான இணையதள சேவையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.