ADDED : ஆக 29, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: லட்சுமாபுரம் கிராமத்தில் குடும்ப பிரச்னை காரணமாக, 38 வயது கட்டட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவாலங்காடு ஒன்றியம் லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 38; கட்டட மேஸ்திரி. இவர், சரியாக வேலைக்கு செல்லாததால், கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று, இரவு வீட்டிற்கு திரும்பி வந்த போது, மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மகேஷ், நள்ளிரவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
