/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம்: அவகாசம் நீட்டிப்பு
/
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம்: அவகாசம் நீட்டிப்பு
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம்: அவகாசம் நீட்டிப்பு
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம்: அவகாசம் நீட்டிப்பு
ADDED : செப் 20, 2024 10:07 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திட்டமில்லா பகுதிகளில் கடந்த, நவ.2011க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டங்களுக்கு வரன்முறைப்படுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த, ஆக.1-ஜன.31, 2025 வரை 6 மாத காலம் நீட்டிப்பு செய்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.