sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூண்டி நீர்தேக்க 'ஷட்டர்' சீரமைப்பு பணி நிறைவு

/

பூண்டி நீர்தேக்க 'ஷட்டர்' சீரமைப்பு பணி நிறைவு

பூண்டி நீர்தேக்க 'ஷட்டர்' சீரமைப்பு பணி நிறைவு

பூண்டி நீர்தேக்க 'ஷட்டர்' சீரமைப்பு பணி நிறைவு


ADDED : அக் 18, 2024 02:27 AM

Google News

ADDED : அக் 18, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:பூண்டி நீர்தேக்கத்தில் உள்ள, 16 'ஷட்டர்'கள் சீரமைப்பு பணி நிறைவடைந்து உள்ளது.

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் அடுத்த பூண்டி கொசஸ்தலை ஆற்றின் நடுவில் நீர்தேக்கம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு, ஆந்திர மாநிலம், அம்மபள்ளி நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர், மற்றும் கர்நாடக மாநிலம் பாலாற்றில் இருந்து வரும் உபரி நீர், கடம்பத்துார் ஒன்றியம் கூவம் அருகில் பிரிந்து, விடையூர், திருவாலங்காடு வழியாக பூண்டியை அடைகிறது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீரும், சாய் கங்கை கால்வாய் வாயிலாக இங்கு சேகரிக்கப்படுகிறது. இந்த நீர், புழல், சோழவரம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின், சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

பூண்டி நீர்தேக்கம் 3.23 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. நீர்தேக்கத்தில் உபரி நீர் வெளியேற 16 'ஷட்டர்'கள் உள்ளன. மழை காலத்தில் பெருக்கெடுத்து வெள்ளம் வரும் உபரி நீர் இந்த 16 ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

நீர்தேக்கம் கட்டி, 77 ஆண்டுகள் கடந்த நிலையில், இங்குள்ள, அவசர கால நீர் வெளியேற்றும் 'ஷட்டர்கள்' பழதடைந்து விட்டன. இதையடுத்து கடந்த மூன்று மாதத்திற்கு முன் ஷட்டர் சீரமைப்பு பணி, 9.48 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியது.

இங்குள்ள, 'ஷட்டர்' மற்றும் மணல் போக்கிகளை புதிதாக பொருத்துதல், புதிதாக நீரளவை கிணறு அமைக்கும் பணி என நடந்து வந்தது. இப்பணிகள் அனைத்தும், தற்போது நிறைவடைந்து விட்டது. தற்போது கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வடகிழக்கு பருவமழையும் துவங்க உள்ளது. 'ஷட்டர்' சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை வழக்கம் போல் தேக்கி வைத்து, சென்னை நகர குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும் என, பொதுப்பணி துறை-நீர்வள ஆதார துறையினர் தெரிவித்தனர்.

ஏ.என்.குப்பம் அணைக்கட்டில்

சீரமைப்பு பணி நிறைவு

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை மற்றும் மிக்ஜாம் புயலின் போது, ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஏராளமான பாதிப்புக்களை உண்டாக்கியது. மேற்கண்ட இரு ஆறுகள் உட்பட, திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு, 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கடந்த ஜூலை மாதம் பணிகள் துவங்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, ஊத்துக்கோட்டை முதல் பெருவாயல் வரையிலான, 34.5 கி.மீ., நீள ஆரணி ஆற்றில், 23.65 கோடி ரூபாய் செலவில், நீர்வளத்துறையினர் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டனர்.

இடைப்பட்ட பகுதியில் உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டில், 2015ம் ஆண்டு வெள்ளப் பெருக்கின் போது, அணைக்கட்டில் பதிக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான கற்கள் பெயர்ந்தன. அதனால், அணைக்கட்டின் அடிப்பகுதியில் விரிசல்கள் பல கண்டு, தண்ணீர் கசிவு ஏற்பட்டு, மழைநீரை சேமிக்க முடியாத நிலையில் இருந்தது.மேலும் அணைக்கட்டு மற்றும் ஒட்டியுள்ள கரை பகுதிகள் பலவீனமான நிலையில் இருந்தன.

இந்நிலையில், ஆரணி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணிகளுடன் ஏ.என்.குப்பம் அணைக்கட்டை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் பெயர்ந்த பெரிய அளவு கற்களை முற்றிலும் அகற்றி மீண்டும் உறுதியாக பதிக்கப்பட்டன. அணைக்கட்டு பகுதியை மேலும் உறுதியாக்கும் விதமாக, அணைக்கட்டு ஒட்டியுள்ள கரையோரத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன.

வடகிழக்கு பருவ மழை தீவரம் அடையும் முன் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்திருந்தார். அதன்படி சீரமைப்பு பணிகள் அனைத்தும் முழுமை பெற்று தற்போது தயார் நிலையில் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us