/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : செப் 22, 2024 07:50 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன், 22. தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னை சென்றிருந்தார்.
நேற்று காலை, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு, அருகில் வசிப்பவர்கள் மாதவனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக வீடு திரும்பியவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, நான்கு சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி, மொபைல்போன், 50,000 ரூபாய் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிந்தது
இது குறித்து மாதவன் திருப்பாலைவனம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்