/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : பிப் 11, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி :
கும்மிடிப்பூண்டி அடுத்து தச்சூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 39. கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, எட்டு சவரன் நகை திருடு போயிருப்பது தெரிந்தது.
இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.