/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அருகே பஸ் - லாரி மோதல்: 4 பேர் பலி
/
திருத்தணி அருகே பஸ் - லாரி மோதல்: 4 பேர் பலி
UPDATED : மார் 07, 2025 07:53 PM
ADDED : மார் 07, 2025 04:13 PM

திருத்தணி : திருத்தணி அருகே அரசு பஸ் மீது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 28க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த விபத்தில் பாண்டுரங்கன் (60), சிவானந்தம் (53), மகேஷ்(40) மற்றும் முரளி(38) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டு உள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ள ஸ்டாலின், அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.