தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பஸ் கண்ணாடி உடைப்பு பள்ளி மாணவனுக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு பள்ளி மாணவனுக்கு வலை

பஸ் கண்ணாடி உடைப்பு பள்ளி மாணவனுக்கு வலை


ADDED : செப் 14, 2025 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:திருத்தணி அருகே பேருந்து நடத்துநரை அடித்து, கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிய பள்ளி மாணவனை போலீசார் தேடுகின்றனர்.

திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, மகான்காளிகாபுரம் நோக்கி, தடம் எண்: டி48 என்ற அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்தனர். பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்ததை நடத்துநர் நரேஷ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவன், கோரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நண்பர்கள் இருவருடன் பைக்கில் பேருந்தை பின்தொடர்ந்துள்ளார்.

அகூர் அருகே பேருந்தை வழிமறித்த மாணவன், நடத்துநர் நரேஷை கட்டையால் சரமாரியாக தாக்கி, பேருந்து கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிச் சென்றார்.

காயமடைந்த நடத்துனர், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us