/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதர் மண்டி கிடக்கும் துணை மின் நிலையம்
/
புதர் மண்டி கிடக்கும் துணை மின் நிலையம்
ADDED : நவ 11, 2024 03:08 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகரில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் வட்டம், திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையம்.
இங்குள்ள கட்டடங்கள் எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மேற்புறம் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதனால் புதிய மின் இணைப்பு பெறுதல், மின் கட்டணம் மற்றும் மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்க வரும் கிராம பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் கட்டங்களில் மழைநீர் தேங்கி ஒழுகுவதால் அலுவலக பதிவேடுகள் நனைந்து வீணாகி வருகின்றன.
எனவே புதர் மண்டிக் கிடக்கும் மணவாளநகர் துணை மின் நிலையத்தை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.