/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழிலதிபர் கொலை: கூலிப்படையினர் 8 பேர் கைது
/
தொழிலதிபர் கொலை: கூலிப்படையினர் 8 பேர் கைது
ADDED : பிப் 13, 2024 06:41 AM

நகரி: ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், சத்தியவேடு நத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ், 40, கண்ட்ரிகா லட்சுமிபுரம் பகுதியில் வாட்டர் பிளான்ட் நடத்தி வந்தார். இவரை கடந்த 3ம் தேதி, அவரது கிராமம் அருகே மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து, நகரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், புத்துார் டி.எஸ்.பி., நரசிம்மமூர்த்தி தலைமையில், நகரி இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சந்தேகத்தின்படி போலீசார், சத்தியவேடு நத்தம் கண்ட்ரிகாவைச் சேர்ந்த சுதாகர், 35, என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுதாகர், ஜெகதீஷ் வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். சுதாகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். சுதாகர் தம்பதிக்கு 3 - 8 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் மனைவிக்கும், ஜெகதீஷுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுதாகர், தன் மனைவி மற்றும் ஜெகதீஷை கண்டித்தார்.
கள்ளத்தொடர்பு தொடர்ந்ததால், சுதாகர் கூலிப்படை வைத்து ஜெகதீஷை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி சுதாகர், தாசுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முரளி, 37, உதவியுடன், திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ராஜாஜிபுரம் மகேஷ், 40, திருப்பாச்சூர் அஜித், 27, கடம்பத்துார் அதிகத்துார் வசந்த், 23, சூரி, 20. மணவாளநகர் ராஜாமுத்து, 24, ஜெயசங்கர் பாலாஜி, 24, ஆகிய ஏழு பேரிடம், ஜெகதீஷை கொலை செய்வதற்கு 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து, மேற்கண்ட ஏழு பேரும் திட்டமிட்டு ஜெகதீஷை வெட்டி கொலை செய்தது தெரிந்தது.
தொடர்ந்து நகரி போலீசார், சுதாகர் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.