/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புரட்டாசி மாதம் எதிரொலியால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
/
புரட்டாசி மாதம் எதிரொலியால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
புரட்டாசி மாதம் எதிரொலியால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
புரட்டாசி மாதம் எதிரொலியால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
ADDED : செப் 23, 2024 12:40 AM
பொன்னேரி: பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில், 80க்கும் அதிகமான இறைச்சி கடைகளும், 100க்கும் மேற்பட்ட சாலையோர மீன்கடைகளும் உள்ளன.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால், இந்த மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை வணங்குவது வழக்கமாக கொண்டு உள்ளனர்.
கடந்த, 17 ல், புரட்டாசி மாதம் துவங்கியது. புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவதை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடுவர். புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இறைச்சி மற்றும் மீன்கடைகள் வெறிச்சோடி கிடந்தன.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டமாக இருக்கும் நிலையில், நேற்று அங்கு வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. சாலையோர மீன்கடைகளும் நேற்று செயல்படவில்லை.