/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விமான படையில் வேலை இளைஞர்களுக்கு அழைப்பு
/
விமான படையில் வேலை இளைஞர்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 20, 2024 11:30 PM
திருவள்ளூர்,இந்திய விமான படையில் 'அக்னிவீர்வாயு' திட்டத்தில் பணிபுரிய, இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய விமான படையில், 'அக்னிவீர் வாயு' திட்டத்தின் கீழ் பணிபுரிய விருப்பமுள்ள திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். ஜன.2, 2004- ஜூலை 2, 2007 ம் ஆண்டிற்குள் பிறந்தோர், ஜன.17- பிப்.6 வரை, https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதி பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு. தேர்வு குறித்த பாடதிட்டம் மற்றும் மாதிரி தாள்கள், அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விவரங்களுக்கு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 044 -27660250, 97897 14244 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

