/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு அழைப்பு
/
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 26, 2025 09:08 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்ய ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பால்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், குறுவை மற்றும் சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயிகள் ஆயத்தமாக உள்ளனர்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின், 2025 - -26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், நடப்பாண்டில் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சொர்ணவாரி பட்டத்தில், 65,000 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஏக்கருக்கு 20 கிலோ விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணுாட்டம் ஆகியவை 50 சதவீத மானியத்திலும், நெல் இயந்திர நடவு செய்ய மானியமாக 4,000 ரூபாய் என, மொத்தம் 19,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
சொர்ணவாரி பருவத்தில் இயந்திர நடவு செய்துள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், நில ஆவணங்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விபரங்களுடன், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.