/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீமாவரத்தில் கால்வாய் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சீமாவரத்தில் கால்வாய் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சீமாவரத்தில் கால்வாய் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சீமாவரத்தில் கால்வாய் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : பிப் 08, 2025 01:24 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள, வல்லுார் அணைக்கட்டில் தேங்கும் மழைநீர், கால்வாய் வழியாக மேலுார், வல்லுார் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கால்வாயின் குறுக்கே கிராமவாசிகளின் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பாலம் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து கிடக்கிறது.
பாலத்தின் மேற்பரப்பில், சரளை கற்கள் பெயர்ந்து உள்ளிருக்கும் கம்பிகள் வெளியில் நீண்டிக் கொண்டிருக்கின்றன. பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். வாகனங்களும் கம்பிகளில் சிக்கி பழுதடைகின்றன.
இரவு நேரங்களில் பாலத்தின் வழியாக நடந்து செல்லும் கிராமவாசிகள், சேதம் அடைந்த பகுதிகளை கடக்கும்போது, இரும்பு கம்பிகளில் சிக்கி சிறு சிறு காயங்களுக்கும் உள்ளாகின்றனர்.
பராமரிப்பு இல்லாமல் பாலம் பலவீனம் அடைந்து வருவதால் அதன் உறுதி தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. பாலத்தின் இணைப்பு சாலை பகுதியும் கரடு முரடாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
பாலம் மற்றும் இணைப்பு சாலையை புதுப்பிக்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.