/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் கழிவுகள் சாலையோரத்தில் குவிப்பு
/
கால்வாய் கழிவுகள் சாலையோரத்தில் குவிப்பு
ADDED : டிச 15, 2024 12:43 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30,000 பேர் வசித்து வருகின்றனர். பேரூராட்சி அலுவலக கட்டடத்தையொட்டி, காந்தி பூங்கா அமைந்துள்ளது பூங்காவை ஒட்டி அத்திமஞ்சேரிப்பேட்டை செல்லும் சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி மறைந்துள்ளது.
சமீபத்தில் பெய்த கனமழையின் போது கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி நின்றது. மழைநீரை அகற்றுவதற்காக பேரூராட்சி ஊழியர்கள், ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த கழிவுநீர் கால்வாயை இடித்து மழைநீரை வெளியேற்றினர்.
இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் அங்கேயே சாலையோரத்தில் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகளும், பகுதிவாசிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீர் கால்வாயை முழுதுமாக ஆக்கிரமிப்பில் இருந்து கைப்பற்றவும், அதை தூர்வாரி சீரமைக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.