/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி மறியல்
/
மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி மறியல்
ADDED : ஏப் 16, 2025 03:07 AM

வெங்கத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சியில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின்வெட்டால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மின்வெட்டை கண்டித்து, அப்பகுதிவாசிகள் 30க்கும் மேற்பட்டோர், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள வெங்கத்துார் பேருந்து நிலையம் அருகே, சாலையில் அமர்ந்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருவள்ளூர் டி.எஸ்.பி., தமிழரசி மற்றும் மணவாள நகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர்.
அதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

